Skip to content

பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

சென்னை அடுத்த ஆவடியில்   ராணுவத்திற்கான  பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் நவீன ரக  ராணுவ   பீரங்கிகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்  காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட  மாநிலங்களில்  தாக்குதல் நடத்தும்   பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்  பஞ்சாப்,  காஷ்மீர், ராஜஸ்தான்,  குஜராத் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களுக்கு டேங்குகள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.   சென்னை அடுத்த  ஆவடி தொழிற்சாலையில் இ ருந்தும்   நவீன ரக காம்பேக்ட் ரக  பீரங்கிகள்  அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

திருச்சியில்  மத்திய அரசுக்கு சொந்தமான  துப்பாக்கி தொழிற்சாலை,  குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன.  இங்கிருந்தும்  அதிக அளவு  படைக்கலன்கள்  போர் பகுதிக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!