புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் களம் இறக்கப்பட்டன. 10சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் சுமார் 435 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் இதில் 17 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பெற்றார் அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியில் வீரர் கார்த்தி 2-ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவனியாபுரத்தைச்சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் 14 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளார். சிவகங்கை மாடுபிடி வீரர் முரளிதரன் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். தேனி சீலையம்பட்டி பகுதியைச்சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி 4-ம் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் 46 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.