தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் விமானப்படை அலுவலகத்தின் மூலம் இந்திய விமானப்படையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி படிப்புகள் குறித்து பள்ளி வளாகத்தில் இன்று மாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை தாம்பரம் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு மையத்தின் விமானி பைண்ட் தலைமையில் 5 பேர் கொண்ட

இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்திய விமானப்படையில் உள்ள உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, ஆள் சேர்ப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒரு வாகனத்தில் எல்.இ.டி திரையின் மூலம் தேசிய விமானப்படை சாதனைகளையும், சாதித்த இந்திய

வீரர்கள் குறித்தும் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் தங்களது மேற்படிப்பில் இந்திய விமானப்படையில் சேருவதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கினர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

