Skip to content

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபெறனியை கரூர் கோட்டாட்சியர் முகம்மது பைசல் துவக்கி வைத்தார். இந்தப் பேரணி கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தின்னப்பா கார்னர் வழியாக பேருந்து நிலையம் ரவுண்டானா, காமராஜர் சிலை, ஜவகர் பஜார் வழியாக திருவள்ளுவர் மைதானம் வந்தடைந்தது.

பேரணி வரும் வழியில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. திருவள்ளுவர் மைதானத்தில் கோட்டாட்சியர் முகம்மது பைசல் மற்றும் வட்டாட்சியர் குமரேசன் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!