கரூர் மாவட்டம் தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி குளித்தலையில் நடைபெற்றது.குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணிசுங்க கேட்டில் துவங்கி பழைய கரூர் -திருச்சி நெடுஞ்சாலை முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.மாணவிகள் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை முழக்கமிட்டும் ஊர்வலமாக வந்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அசோகன், மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கல்லூரி நாட்டு நலப்பணித்த ஒருங்கிணைப்பாளர் மேரிஜோன், கல்லூரி துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.