Skip to content

பாபர் மசூதி இடிப்பு தினம்-திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

  • by Authour

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இடித்தவனுக்கு தண்டனை வழங்கு – இழந்தவனுக்கு நீதி வழங்கு என்ற முழக்கத்துடனும், பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று பாசிச எதிர்ப்பு நாளாக அனுசரித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டமானது பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்டதலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வக்பு மற்றும் வழிபாட்டு

உரிமைகளை காக்க, அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவை சேர்த்து இடிக்கப்பட்டுள்ளது என்றும், இதனை பாசிசத்தின் நாளாகவே நாங்கள் கடைபிடித்து வருகிறோம்.

இந்திய அரசு அளித்த வழிபாட்டு உரிமையை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அதிகாரம் கிடையாது, எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை உங்களது போராட்டத்தை தொடருகின்றோம் என்றார் மாநில பொதுச் செயலாளர் அப்துல்கரீம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சில அமைப்புகள் சேர்ந்து மத பதட்டத்தை உருவாக்குகிறார்கள், அதனை கூடாது என்கிறோம். கீழே கந்தர் மேலே சிக்கந்தர் என்று திருப்பரங்குன்றம் மக்கள் சொல்கிறார்கள், இதுதான் அந்தமக்களின் இயல்பு சில சங்க பரிவார் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து மடைமாற்றபார்க்கிறார்கள், அதனை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசின் செயல்பாடுகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!