Skip to content

‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதாக செய்தி வெளியான நிலையில் அதனை நடிகர் சூரி கண்டித்து இருந்தார். இதையடுத்து ரசிகர்களை பகிரங்கமாக சாடி இருப்பதை வரவேற்றுள்ள கவிஞர் வைரமுத்து, இதேபோல மற்ற நடிகர்களும் செய்தால் கலைத் துறை மேம்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

திரைக்கலைஞர்

தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்

தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்

மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது

இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும்

கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்

தங்கள் ரசிகர் கூட்டத்தை
இப்படி நெறிப்படுத்தி
வைத்திருந்தால்
கலையும் கலாசாரமும்
மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்

மண்சோறு தின்றால் ஓடாது
மக்களுக்குப் பிடித்தால்
மாமன் ஓடும்

பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை
‘பலே பாண்டியா’
என்று பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!