இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த இரண்டு தொடர்களிலும் இரண்டு போட்டிகளுக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் பிறகு, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 10 முதல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மாற்றி அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, இந்த போட்டி இப்போது புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும்.
மேலும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருந்தது, ஆனால் இப்போது அது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை
- இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
- இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் புது தில்லியில் நடைபெறும்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் கொல்கத்தாவில் நடைபெறும்.
- இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் குவஹாத்தியில் நடைபெறும்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறும்.
- இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதி ராய்ப்பூரில் நடைபெறும்.
- மூன்றாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி டிசம்பர் 9 ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறும்.
- இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி நியூ சண்டிகரில் நடைபெறும்.
- மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 14 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும்.
- நான்காவது டி20 போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி லக்னோவில் நடைபெறும்.
- ஐந்தாவது டி20 போட்டி டிசம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.