Skip to content

கோவை மாரியம்மன் கோவிலில் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் உடலை வருத்தி
அந்தரத்தில் தொங்கியவாறு அழகு குத்தி ஊர்வலம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்
மிகவும் பிரசித்தி பெற்றதாகும் பொள்ளாச்சி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும்
கோவிலில் தேர் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 17 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது
அதனைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் செவ்வாய்க்கிழமை கம்பம் நடப்பட்டது
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து பூவோடு எடுப்பதற்கு கையில் காப்பு கட்டிவிரதம் இருந்து வருகின்றனர் . இன்று பொள்ளாச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர் முக்கிய நிகழ்வான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திடலில் இருந்து
பறவை காவடி, வாய் வேல், மயில் காவடி. போன்ற பல்வேறு விதமாக அழகு குத்தியும் தங்களது உடலை வருத்தி கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாரு பக்தி பரவசத்துடன்
முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் அழகு குத்தி ஊர்வலமாக வந்ததை பக்தி பரவசத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து சென்றனர்.

error: Content is protected !!