Skip to content

கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரங்களில் சந்தன கட்டை கடந்தலை தடுக்க ,வன விலங்குகளை மருமகன் மர்ம நபர்கள் வேட்டையாடுதல் தடுத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் வனப்பகுதியில் ஈடுபடும் நபர்களை கண்டறிய வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பயிற்சி அளிக்கப்பட்ட பைரவா கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை பயிற்சியாளர் கட்டுப்பாட்டில் வைத்து பயன்படுத்தி வந்தனர் வனத்துறையினர் . இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் பயிற்சியாளர் பயிற்சி கொடுக்கும் பொழுது சாலையில் தெரு நாய்கள் சத்தம் கேட்ட பைரவா பயிற்சியாளர் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே ஓடிவந்த பொழுது அவ்வழியே சென்ற அரசு பேருந்து மோதி உயிரிழந்தது. பைரவா உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பைரவா உடலை மீட்ட வனத்துறையினர் வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பிறகு அடக்கம் செய்யப்பட்ட உள்ளது என தெரிவித்தனர் .

error: Content is protected !!