புதுக்கோட்டை மாவட்டம் , மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில், மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் செயலர், பேராசிரியர் சே.சுசிலாதேவி தொடக்கவுரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்ச் செம்மல். ரமா.ராமநாதன் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.தமிழில் புதுப்புது இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. தமிழில் வசனக் கவிதையை அறிமுகப்படுத்தியவர் பாரதி தான். அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்டமனின் வசனக் கவிதைகளை தமழில் மொழி பெயர்த்தார். அது மட்டுமல்லாமல். அவரே தமிழில் வசனக் கவிதைகளையும் படைத்தார். தமிழில் பக்தியும், காதலும் இரண்டறக் கலந்திருந்தார். அவருக்கு 9மொழிகள் பேசவும், எழுதவும் தெரியும். எனினும் தமிழ்தான் உன்னதமான மொழி என்று பெருமிதம் கொண்டார் என்றார். நிறைவில் ஆசிரியர் அ.தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.
புதுகை அரசு பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா- கொண்டாட்டம்

