முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று துடியலூர் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி மற்றும் கோவை மாநகராட்சியின் மேயர் , ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணைச் செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.கார்த்திக் மற்றும் பகுதி, ஒன்றிய, பேரூர்,வட்ட வட்ட செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பித்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 5 மாதங்களே உள்ள நிலையில் கோவை திமுக மிக வேகமாக தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..
- by Authour
