இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த 8-வது சீசனில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும், விஜய் சேதுபதியும், தனது தொகுப்பாளர் திறமையை நிரூபித்திருந்தார்.
அடுத்து 9-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் எப்போது தொடங்கும் என்பது பலரின் கேள்வியாக இருந்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் குறித்து முக்கிய அறிவிப்பு இன்று மாலை வரவிருக்கிறது என்று விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஜனவரி மாதம் முடிந்த நிலையில் அக்டோபர் 5ம் தேதி முதல் 9வது சீசனை பார்த்து மகிழலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் 9 அறிவிப்பு வரும் என்று வீடியோ வெளியிட்டு அறிவித்திருக்கிறது விஜய் டிவி.