நெல்லையில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் வகையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த வேலை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நெல்லை இல்லை. எத்தனை பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். எந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், யாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதை டெல்லி தீர்மானிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் 80 சதவீதம் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இனி 100 நாள் வேலை என்பதே கிடையாது என்ற நிலையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு துரோகம் செய்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜக – அதிமுக யார் என்பதை மக்களிடம் தோலுரித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு எம்பி கனிமொழி பேசினார்.

