திருச்சி சோமரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். எம்எல்ஏ பழனியாண்டியின் இளையமகன் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது..
SIRக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். நிற்காமல் இயங்கி கொண்டிருப்பதை தான் இயக்கம் என்று சொல்கிறோம். திமுகவை ஒழிக்கலாம் என SIR ஆயுதத்தை

எடுத்துள்ளார்கள். SIr தொடர்பாக அதிமுக திடீரென் வழக்கு தொடர்வது ஏன்? தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும் நம்பும் நிலையில் அதிமுக உள்ளது.
எதிரிகள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது இயக்கம் நின்றுவிட இயலாது. திமுக சுறுசுறுபபாக சீர்இளமையோடு வலிமையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் கூட தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். திமுகவினருக்கு எப்போதும் ஓய்வே கிடையாது. திமுக தலைவர்கள் சகோதர பாச உணர்வோடு வழிநடத்தி வந்துள்ளனர் என்று இவ்வாறு பேசினார்.

