பாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்

51
Spread the love

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன்,92. இவர் சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். தமிழக பா.ஜ., தலைவராக இரண்டு முறை பதவி வகித்துஉள்ளார். 2001ல் நடந்த தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் துக்ளக் விழாவில் பெரியாரின் ஊர்வலம் ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். அதனை சிலர் சர்ச்சையாக்கப்பட்ட போது பெரியார் ஊர்வலத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் என்கிற ரீதியில் லட்சுமணன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY