Skip to content

“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

சென்னையில் நடைபெற்ற ஒரு பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “நாம அவசரமா எங்கேயாவது போகணும்னா Ola, Rapido-ல book பண்ணுவோம். அதே மாதிரி இன்னைக்கு பாஜக அதிமுகவை book பண்ணி வச்சு, அவங்க அவசரத்துக்கு use பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று அவர் உருவகப்படுத்தி கூறினார்.

உதயநிதி பீகார் உதாரணத்தை எடுத்துக்காட்டினார். “பீகாரில் நிதிஷ் குமார் தேர்தல் ஜெயிச்சு முதலமைச்சரானார். சில மாதங்களிலேயே பாஜக அவரை ஓல கட்டிட்டு, மாநிலத்தை கண்ட்ரோல் எடுத்துக்கிச்சு. அவரை MP ஆக்கிட்டாங்க. பத்து முறை முதலமைச்சரான நிதிஷ்க்கே இந்த நிலைமைன்னா, ஊர்ந்து போய் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி என்ன ஆவார்? தேர்தல் அப்புறம் பாருங்க, அதிமுகவை பாஜக முழுங்கி-முழுங்கி துப்பிடும்” என்று கடுமையாக சாடினார்.

மேலும், பழனிசாமிக்கு பாஜகவை எதிர்க்கும் தைரியம் இல்லை என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார். “இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய தலைவர் ஒருவர்தான்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தலைவர்கள் கடந்த காலத்தில் பாஜகவை எதிர்த்து பேசியவற்றை rewind செய்து பார்க்குமாறு அவர் வலியுறுத்தினார்.

“பாஜகவை நாங்க இனிமே நிச்சயம் சுமக்கமாட்டோம்”, “2026, 2036-ல கூட பாஜகவோடு கூட்டணி நிற்க மாட்டோம்” என்று சொன்னவர்கள் இன்று பாஜகவோடு சேர்ந்து இருப்பதை சுட்டிக்காட்டிய உதயநிதி, “எடப்பாடி பழனிசாமிக்கு கவுன்சிலர் ஆவதற்கு கூட தகுதி இல்லை”, “tire நக்கி” என்று சொன்னவர்கள் இன்று அவரோடு கூட்டணி வைத்திருப்பதை விமர்சித்தார்.

“இப்படிப்பட்ட அடிமைகளையும், அவங்களோட ownersகளையும், fascistsகளையும் ஓட ஓட மிரட்டி, விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வருகிறது” என்று தேர்தல் களத்தை நோக்கி அழைப்பு விடுத்தார்.தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் மிகப்பெரிய அலை உருவாகியுள்ளதாக உதயநிதி உறுதியளித்தார். “வெல்லப்போவது திமுக கூட்டணிதான். ஆனால் அந்த வெற்றி சாதாரணமாக இருக்கக் கூடாது. 2021 தேர்தலை விட பெரிதாக இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். அடுத்த 35 நாட்களில் நிபந்தனையின்றி மக்களை நேரடியாக சந்திப்போம் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த பேச்சு விழாவில் இருந்த திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!