Skip to content

மாட்டு லோனுக்காக எம்டி செக்… 3 லட்சம் வாங்கியதாக பிளாக் மெயில்.. கலெக்டரிடம் மனு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கௌதம் (21) இவர் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கௌதம் தன்னுடைய வீட்டில் சண்டை போட்டதன் காரணமாக மூன்று மாதங்களாக ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியிலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஓனர் ஹரி உனக்கு மாட்டு லோன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார் இதனை நம்பிய கௌதம் தன்னிடமிருந்த மூன்று நிரப்பப்படாத காசோலைகளை ஓனரிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை புரிந்த லோகேஷ் என்பவருக்கும் கௌதம் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓனர் ஹரி லோகேஷ்க்கு சப்போர்ட் செய்யும் வகையில் மாற்று லோன் வாங்க கொடுக்கப்பட்ட காசோலையை லோகேஷிடம் கொடுத்துள்ளார்.

இதனால் லோகேஷ் தனக்கு மூன்று லட்ச ரூபாய் தர வேண்டும் எனக்கூறி வக்கீல் நோட்டீஸ் கௌதமுக்கு அனுப்பி பிளாக் மெயில் பண்ணதாக கூறப்படுகிறது.

மாட்டு லோன் வாங்கி தருவதாக கூறி பெறப்பட்ட காசோலையை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி ‌ கௌதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!