Skip to content

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை முதல் இலவச கண் பரிசோதனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த கலையரங்கில் கலைஞரின் புகழுக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவரது வரலாறு கூறும் பாடல்கள் மற்றும் கலைஞர் கதை வசனத்தில்

உருவான திரைஇசைப்பாடல்களை கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இன்னிசையுடன் பாடி கலைஞரை‌ அனைவரின் மனதிலும் நினைவு கூர்ந்தனர். இதில் கலைஞர் தமிழ்சங்க நிர்வாகி கீதா ராஜாகாவேரி மணியன், பொன்னம்பட்டி பேரூராட்சி துணைத்தலவர் ரதிரமேஷ், ஆசிரியர் பழனி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர், அஜீஸ், கணபதி, ஆறுமுகம், ஹக்கீம், திமுக மாவட்ட பிரதிநிதி அப்துல் சலாம்
முன்னாள் கவுன்சிலர் நல்லம்மாள் அழகன் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!