விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

