Skip to content

கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் அமைந்துள்ளது..

இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது..

இந்நிலையில் அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அரசலாற்றில்

குழந்தை ஒன்று மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, உயிரிழந்த நிலையில் ஆற்றில் கிடந்த ஓரிரு நாட்களே ஆன ஆண் குழந்தையை அந்தப் பகுதியில் இருந்து சடலமாக மீட்டனர்.

தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் பிறந்த ஆண் குழந்தையின் பெற்றோர்கள் யார், ஆற்றில் போட்டுவிட்டு சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணத்தில்

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த குழந்தை ஆற்றில் உயிரிழந்த நிலையில் மிதந்து கிடந்தது இளங்கார்குடி சுற்றி உள்ள கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

error: Content is protected !!