சென்னை அக்கரை கடற்கரையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் கிடந்த சடலம், வேலூரை சேர்ந்த கலையரசனின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாலிபர் உடலை மீட்டு சென்னை நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தில் செலோடேப் சுற்றியபடி இளைஞர் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

