சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான முனிதா குமாரியின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து முனிதா குமாரியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பீகாரைச் சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், பீகாஸ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பண விவகாரத்திற்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

