கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்த பாஸ்கர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த இளைஞர் பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் பாஸ்கர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
- by Authour
