Skip to content

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

  • by Authour

இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்த தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலியின் கணவரான தர்மேந்திரா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.  பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

error: Content is protected !!