சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா வனப் பகுதியில் இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 10 போலீசார் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். பஸ்டர் என்ற காட்டுபகுதியில் சென்றபோது, புதர்கள் அடங்கிய பகுதியில் இருந்து போலீஸ் வாகனம் மீது சரமாரி வெடிகுண்டுகள் வீசப்பட்டது. இதில் வாகனத்தில் இருந்த 10 போலீசாரும், வாகனத்தை ஓட்டிய டிரைவரும் (அவரும் போலீஸ்காரர்தான்) அந்த இடத்திலேயே பலியானார்கள். மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி
- by Authour

