Skip to content

நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை.  சென்னையில் சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (அக்.3) காலை முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். மேலும் நடிகை திரிஷா வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!