Skip to content

நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

  • by Authour

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும், அது வெறும் புரளி என்று தெரியவந்தது. 

சென்னை நகரில் உள்ள பிரபலங்களின் வீடுகளுக்கு, குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட்டது.

துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கும் இதேபோல் ஒரு போலியான மிரட்டல் வந்தது. இது போன்ற பல போலியான மிரட்டல்கள் தொடர்ச்சியாகச் சென்னையின் முக்கியப் பிரமுகர்களை இலக்காக வைத்து விடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை மா்ம நபா் ஒருவா் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். அதில் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு மற்றும் அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் பிரபு வீட்டை சோதனையிட்டதில் அது புரளி என தெரியவந்துள்ளது.

error: Content is protected !!