சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
தகவலின்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் ராயப்பேட்டை போலீசார் தீவிர சோதனையில், அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இப்பொது, இமெயில் அனுப்பியவர் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டல்கள் பொதுவாக மின்னஞ்சல் மூலம் வந்தவை மற்றும் காவல்துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை நடத்தியதாகவும், பெரும்பாலும் இவை புரளிகளாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற மிரட்டல்கள் குறித்து பொதுமக்கள் பீதியடையாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.