Skip to content

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் தேமுதிக அலுலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டுஅலைபேசி தொடர்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!