அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அந்த நபர் மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க போவதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் அனைவரும் இறக்கப் போகிறார்கள் என்றும் பேசிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். இதையடுத்து மீன்சுருட்டி காவல் நிலையத்தை
சோதனையிட்ட போலீசார் அது போலி மிரட்டல் என்று கண்டறிந்துள்ளனர். பின்னர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (24) என்பவர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
