Skip to content

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கோர்ட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!