Skip to content

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, பெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட  சுமார்  50 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க டாலர் நிதியை தர வேண்டும் என்றும்  தெரிவித்திருந்தார்.

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம் 300 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்குப் பிறகு அவை போலி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், கடந்த திங்கள் கிழமையும் டெல்லியில் 32 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
error: Content is protected !!