Skip to content

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார் அந்த போன் நம்பர் மூலம் அவரை கண்டு பிடித்து கைது செய்தனர். அவர் செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தை சேர்ந்தவர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்திருந்த அவர் போதையில் இவ்வாறு பேசிவிட்டதாக கூறினார். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

error: Content is protected !!