சண்டிகாரில் 10 அரசுப் பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என மொத்தம் 26 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குடியரசு தின கொண்டாட்டம் முடிந்த இரண்டு நாட்களில், காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் இந்த மிரட்டல் வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.உடனடியாக மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் திரண்டதால் பள்ளிப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

