திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (49) இவர் நேற்று திருவரங்கம் ட்ரங்க் சாலையில் லாரியை சாலையின் நடுதடுப்பு கட்டை அருகே நிறுத்தி அவரது உதவியாளருடன் சேர்ந்து தடுப்பு கட்டைகளில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் லாரி மூலமாக தண்ணீர் பாய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருவரங்கம் அழகிரிபுரத்தைச் சேர்ந்த வீரமணி மகன் மதன்குமார் (16) இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார் அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த வேலன் என்ற 16 வயது சிறுவன் பின்னே அமர்ந்து வந்தார். மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நின்று இருந்த தண்ணீர் லாரி மீது மோதியது இதில் மதன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வேலன் காயம் அடைந்தார் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் மதன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர் மேல் சிகிச்சைக்காக வேலன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

