திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை அடுத்த கீழ்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகஜ் கிரண், (14). இவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் கிரண் மற்றும் அவரது சகோதரி மட்டுமே இருந்தனர். அப்போது கிரண், வீட்டு முற்றத்தில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ஊஞ்சல் கட்டியிருந்த சேலை, கிரணின் கழுத்தில் இறுகிக்கொண்டது. கிரண் திணறுவதை உணர்ந்த அவரது சகோதரி அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிரணை மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே, கிரண் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறி்தது பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.