Skip to content

முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்-கோரிக்கை

கோப்பு பாலம் – முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்.
புதிய பாலம் கட்டவும், பாலம் கட்டும் வரை மாற்று பாதை அமைக்க தரவும் விவசாயிகள் கோரிக்கை,
.
அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழுமணி கோப்பு பாலம் -புலிவலம் , கொடியாலம்| வழியாக முக்கொம்பு அருகே திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்து வருகிறது இச்சாலையில் உய்யக் கொண்டான் புலவலம் மனற் போக்கி வடிகால் அருகே உள்ள உய்யக் கொண்டான் துணை வடிகாலில் இருந்த பாலம் இன்று(13-01-2026) விடியற்காலை 4,மணி அளவில் உடைந்து போக்குவரத்து தடைபட்டு உள்ளது
இச்சாலைதிருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை ,முக்கொம்பு ஜீயபுரம்பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டால் மாற்றுப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இந்தப் பகுதியில் புலிவலம் கொடியாலம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் விவசாய நிலங்களுக்கு இடுபொருள்கள் மற்றும் விளை பொருள்களை டிராக்டர்,மற்றும் வண்டி வாகனங்களில் கொண்டு செல்லும் இருந்து சாலையாக இருந்து வருவதோடு பள்ளி கல்லூரி வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலை ஆகவும் இருந்து வருகிறது.
தற்போது இந்த சாலை உடைந்து துண்டாகி இருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இவ் இடத்தை கடக்க வேண்டுமென்றால் 7- கிமீ தூரம் ஜியபுரம் சு சுற்றி வர வேன்டும். எனவே
. இச் சாலையில் உடைந்து போன பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டி தர விரைவான நடவடிக்கை எடுப்பதுடன் தற்பொழுது அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில் விவசாயிகள் நலன் கருதி டிராக்டர் உள்ளிட்ட வண்டி வாகனங்கள்சென்று வரும் வகையில் ஒரு தற்காலிக மாற்று பாலம் அமைத்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும் எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மாற்றுப் பாலம் அமைத்துதரஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

error: Content is protected !!