திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (41) ருக்கு தம்பதியினர் திருப்பதி மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியில் புதியவீடு கட்டுவதற்காக பணி தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக இன்று காலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ள

ம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் ஐந்து அடி ஆழம் பள்ளம் தோண்டிய நிலையில் அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் சுமார் 7 இன்ச் அளவிலான முருகன் வெண்கல சிலை கிடைத்துள்ளது.
பின்னர் உடனடியாக இதுகுறித்து திருப்பதி தாசில்தார் காஞ்சனாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் காஞ்சனாவிடம் 7 இன்ச் அளவிலான முருகன் வெண்கல சிலையை ஒப்படைத்தனர்.
அதனைதொடர்ந்து சிலையை எடுத்து சென்ற தாசில்தார் அது தொடர்பாக சிலையை ஆய்வு மேற்கொண்டபோது அந்த சிலை 18ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் புதியவீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் கொண்டு தண்ணி தொட்டிக்காக பள்ளம் தோண்டியபோது 7 இன்ச் அளவிலான முருகன் வெண்கல சிலை கிடைக்கப்பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

