Skip to content

அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் சக்திவேல் (38), இவர், பேராவூரணி தாலுக்கா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பேராவூரணி பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் (39 ) என்பவரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடன் வாங்கிய சக்திவேல், தலைமறைவாகி விட்டாராம். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29) வந்துள்ளார். இது குறித்து அறிந்த ராஜேஷ் குமார், நேற்று இரவு பிரகதீஸ்வரனை சந்தித்து உன் அண்ணன் சக்திவேல் என்னிடமிருந்து ரூ. 15 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டான். அந்த பணத்தை நீதான் தர வேண்டும். உடனடியாக திருப்பிக் கொடு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதற்கு பிரகதீஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியதில் ராஜேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகதீஸ்வரனை வெட்டி உள்ளார்.

காயமடைந்த நிலையில் உயிர்பிழைக்க பிரகதீஸ்வரன் வீட்டிலிருந்து வெளியில் ஓடி உள்ளார். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற ராஜேஷ்குமார், பிரகதீஸ்வரன் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

இதையடுத்து ராஜேஷ்குமார் வாட்டாத்திகோட்டை போலீசில் சரண்டர் ஆனார். தகவல் அறிந்த போலீசார் ராஜேஷ் குமார், மீது வழக்கு பதிவு செய்து பாப்பாநாடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் படுகொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனின் உடலை போலீசார் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!