ஆண்டர்சன் -சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த தொடரின் நான்காவது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே ஆடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2 போட்டிகளில் அவர் ஆடிவிட்டார். எனவே இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே ஆடுவார். வரும் 23ம் தேதி தொடங்க உள்ள போட்டியில் பும்ரா களம் இறங்குகிறார்.
கடைசி போட்டி ஓவலில் நடக்கிறது. இதில் பும்ரா விளையாட மாட்டார் என தெரிகிறது. ஆனாலும் இனி வரும் இரு போட்டிகளிலும் பும்ரா ஆடவேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக கும்ப்ளே இனி வரும் 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதே நேரத்தில் பும்ரா ஆடாத 2வது டெஸ்டில் தான் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.