ஜார்கண்ட் மாநிலம் மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதியில் தியோகர் என்ற இடத்தில் யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பஸ்சும், கேஸ் சிலிண்டர் ஏற்றிய லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மொத்தம் 18 யாத்ரீகர்கள் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள். டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டியதில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.