தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் பணிகள், குறித்து முதல்வர் ஆய்வு செய்கிறார். தொழில் முதலீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், ஆணவப்படுகொலைையை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கவும் இந்த கூட்டம் கூட்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
