கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது பழைய ஜெயங்கொண்டம் பிரிவு சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து கோவை வரை செல்லும் கார் எதிரே வந்து மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பெண்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்வுக்காக சென்று விட்டு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.