திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவர் ரயில்வேவில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ராகுல் மற்றும் கோகுல் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்த இருவரின் நண்பரான கல்லறை மேடு பகுதியை சேர்ந்த ராஜபிரபு மகன் நிரஞ்சன் என்பவர் நேற்று மதியம் ராகுல் வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும் ராகுல் வீட்டின் சாவியை வெளியே வைத்துவிட்டு செல்வது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர் இதனை அறிந்த நிரஞ்சன் ராகுல் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சாவியை எடுத்து வீட்டிற்குள்ளே புகுந்து கார் சாவியையும் அதேபோல வீட்டிலிருந்த லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த எர்டிகா காரை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வீடு வந்த ரமேஷ் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ராகுலின் பள்ளி வயது நண்பரான நிரஞ்சன் காரை எடுத்து சென்றது தெரிய வந்தது.
பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஓசூர் பகுதியில் காரை பறிமுதல் செய்து நிரஞ்சனை பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் முதற்கட்ட விசாரணையில் நிரஞ்சன் காருக்கு சொந்தமானவர்களே காரை எடுத்து செல்லக் கூறியதாக போலீசாரிடம் தெரிவித்ததன் காரணமாக போலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.. மேலும் நிரஞ்சன் பொய் கூறுகிறாரா? அல்லது உண்மையிலேயே கார் திருட்டு சம்பவத்தில் காரின் உரிமையாளர்களுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா? தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..