Skip to content

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

பெண்ணிடம் கைப்பையை திருடிய பெண் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( 35 ).இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம பெண் சத்யாவின் கைப்பையைத் திருடி சென்றார். அதில் வெளிநாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம்,ரூ.2500 ரொக்கம் ஆகியவை உள்ளன. இதுகுறித்து புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து திருப்பூர் வீரபாண்டி ஆவாரப்பாளையம் பகுதியை சேர்ந்த கலைமணியை (45) கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர்(41). இவரது மனைவி நான்சி (29), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி அருகில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் மனைவி தனது வேலை முடிந்து சம்பளத்துடன் வீட்டிற்கு வந்தபோது, கணவர் சம்பளத்தைப் பெற்று, பின்னர் நிலுவையில் கடனை திருப்பிச் செலுத்தினார். பின்னர் மீதமுள்ள தொகையை மது அருந்தினார்.இதனால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் முகம், தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த மனைவி அளித்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கணவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பழைய இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (37). இவர் இ.பி சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாபெட்டியில் இருந்த ரூ.20ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திருட்டில் ஈடுபட்டது இ.பி. சாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த வீரவேல் (18) என்பது தெரிய வந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி பிரிந்து சென்றதால் கேன்டீன்
ஊழியர் தற்கொலை

திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25. ) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இவர் பெங்களூரில் தனியார் கேண்டினில் ஊழியராக வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி தனியாக பிரிந்து சென்று விட்டார் .இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!