திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு படடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது24) இவர் திண்டுக்கல் டவுன் பகுதியில் ஈடுபட்ட குற்ற சம்பவத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20 ந்தேதி திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சக்கரவர்த்தியிடம் சோதனை நடத்தினார். இதில் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 19ஆம் தேதி மத்திய சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது 10 கிராம் கஞ்சாவை மர்ம நபரிடம் இருந்து பெற்று தன் ஆசனவாய் பகுதியில் வைத்துப் பதுக்கி சிறையினுள் எடுத்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…
- by Authour
