கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.இதில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன்,… கரூர் மாவட்டம் மண்மங்களம் வட்டம் அச்சமாள்புரம் மற்றும் நெரூர் வடக்கு கிராமத்தில் காவிரி ஆற்றில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் 2 புதிய மணல் குவாரி அமைக்க கடந்த 4.10.2023ம் ஆண்டு கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. சிறு கனிம சலுகை விதிக்கு புறம்பாகவும், மணல் அள்ளுவதாக திட்ட அறிக்கையில் மணல் குவாரி அமைத்து அள்ளுவதாக கூறப்பட்ட அளவுக்கு மேல் தற்போது அந்த இடத்தில் மணல் இல்லாமல் இருப்பதாலும், 500 மீ சுற்றளவில் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் நிரந்தர கட்டுமானங்கள் உள்ளதை மறைத்து நடந்ததாகவும், காவிரி ஆற்றை பாலைவமனாக்கும் முடிவுடன் செயல்படுவதை கண்டித்து மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து வந்த வாங்கல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியை போலீசார் கைது செய்யவில்லை என்றார்.