கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் அமைத்த SITக்கு தடை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் SIT அல்லது சிபிஐ விசாரணை வேண்டுமென மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் இறந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது.
நாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என செல்வராஸ், பிரததீக் தாய் ஷ்ர்மிளா முறையீடு.
இருவரின் முறையீடு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்.
ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் என உ்சசநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனுதாரர்களுக்கு தெரியாமலேயே மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்தது உச்சநீதிமன்றம்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு முன்பு தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் குழுவில் இருக்கக்கூடாது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்த முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரம்புக்கு உட்பட்ட வழக்கை தனி நீதிபதி விசாரத்தது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி.
முதலமைச்சர் அமைத்த ஒரு நபர் ஆணையத்தையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளார் தனி நீதிபதி… உச்சநீதிமன்றம்.
வழிகாட்டு நெறிமுறை கோரிய வழக்கை கிரிமினல் வழக்காக பட்டியலிட்டு விசாரித்தது எப்படி?… உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.