Skip to content

தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், மின்வாரிய அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த 8ஆம் தேதி தவெக சார்பில் சிபிஐ அலுவலகத்தில் வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ள நிலையில்

நேற்று காலை 10 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகி இடையே இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்று.

இன்று இரண்டாவது நாளாக கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

சிபிஐ விசாரணையில் முன்னேற்பாடு பணிகள், தாமதத்திற்கான காரணம், கூட்ட நெரிசல் பற்றி பல்வேறு கேள்விகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

error: Content is protected !!